செய்திகள் :

திருமணத்தில் ஸ்டாலின்; வரவேற்பில் விஜய்! - சென்னையில் பிரபல திருமண நிகழ்வு; யார் வீட்டு கல்யாணம்?

post image

சென்னையில் இன்று ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடந்தது. காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கலந்து கொள்ள, மாலையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த வரவேற்பில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டுள்ளார்.

மணமகன் சாஹில் ஜெகன் மோகனின் சகோதரரான சுனில் ரெட்டியின் மகன். மணமகள் வேதிகா காரைக்குடி பிசினஸ் குழுமமான முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்த அருண் முருகப்பன் – சிகப்பி தம்பதியின் மகள்.

காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரின் குடும்ப மரபுப்படி திருமணம் செய்ய விரும்பினார்களாம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

எனவே காலையில் மணமகள் வீட்டாரின் விருப்பப்படி இந்து செட்டிநாட்டு முறைப்படி நடந்திருக்கிறது திருமணம். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். தவிர சினிமா நடிகர் நடிகைகள் சிலரும் கூட திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.

இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் முதலில் வரவேற்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் அதில் கலந்து கொள்ள இருப்பது அறிந்தே அதை மாற்றியதாகவும் சொல்கிறார்கள் சிலர்.

இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்: ஸ்டாலின் ரேம்ப் வாக்; திரண்ட பெருங்கூட்டம்... திமுக இளைஞர் அணி மாநாடு க்ளிக்ஸ்!

விருதுநகர்: பிரமாண்டமாக நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாடு.! மேலும் பார்க்க

"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது விஜய் குறித்து பேசிய அவர், " விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே சாட்சி. அவர் எங்கே வெளியில் வர... மேலும் பார்க்க

திருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய - மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா... தற்போது மலேசியா என அடுத்தடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது இந்தியா.ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா கையெழுத்திட்டது வர்த்தக ஒப்பந்தம். ஆனால்... மேலும் பார்க்க

TNPSC குரூப் 2, 2A தேர்வு ஒத்திவைப்பு; "ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர்‌ அறிவ... மேலும் பார்க்க

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி ச... மேலும் பார்க்க