சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? - மக்கள் பிரதிநிதித்துவச் ச...
திருமணத்துக்கு மறுப்பு? - 'கௌரி' சீரியல் நடிகை நந்தினியின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?!
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினியின் தற்கொலைக்கான காரணமாக பெங்களூரு போலீசார் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் நந்தினி.
கௌரி தொடரில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்த நந்தினி, இதற்கு முன் கன்னட சீரியல்களில் நடித்திருந்தார்.
திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

தொடரில் அவருடன் நடித்த சிலரிடம் நாம் பேசியபோது,
``தமிழுக்கு இப்பதான் வந்திருந்தாங்க. முதல் சீரியல்லயே இரட்டை வேடம் கிடைச்சதுல உற்சாகமாக இருந்தாங்க. அம்மன் வேடத்துல நடிக்கிறப்பெல்லாம் அவ்வளவு சின்சியரா நடிச்சாங்க.
கல்யாணம் ஆகலை. அதேநேரம், காதலன்னு யாரையும் கூட்டி வந்து நாங்க பார்த்ததே இல்லை. அதனால காதல் தோல்வின்னெல்லாம் ஒரு விஷயத்தைச் சொல்லவே முடியாது..
பெரிய பிரச்னையா இருந்தா நிச்சயம் யூனிட்ல யார்கிட்டயாச்சும் சொல்லியிருப்பாங்க. அப்படி எதுவும் சொன்னதா தெரியலை" என்றார்கள்..
பெங்களூரு சென்று வந்த சிலரிடம் பேசினோம்.
''அவரின் உடலைக் கைப்பற்றி விசாரிச்சப்ப போலீஸ் அவர் எழுதி வச்சதா சில கடிதங்களை எடுத்ததாச் சொன்னாங்க. அதாவது அவங்க அப்பா கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டார். அவர் அரசு வேலையில இருந்தார். வேலையில இருந்த போதே இறந்ததால் கருணை அடிப்படையில் நந்தினிக்கு அரசு வேலை கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க.
அதனால வீட்டுல நடிப்பை விட்டுட்டு அந்த வேலைக்குப் போக நந்தினியை வற்புறுத்தினதாகச் சொல்லப்படுது.
ஆனா நடிப்புல ஆர்வம் இருக்கிறதால அந்த வேலையில சேர இவருக்கு ஆர்வம் இல்லை.
இது தொடர்பா வீட்டுல இருக்கிற மத்தவங்களுக்கும் நந்தினிக்கும் இடையில் பிரச்னை உண்டாகியிருக்கு.
'சீக்கிரம் வேலைக்குப் போயிட்டா ஒரு கல்யாணத்தைச் செய்துடலாம்'ங்கிறதுதான் நந்தினியின் அம்மா உள்ளிட்ட வீட்டாரின் எண்ணம்.
அதுக்கு அவர் சம்மதம் சொல்லலை. இந்தப் பிரச்னையில கொஞ்சம் மன அழுத்தத்துல இருந்திருக்கிறார்னு போலீஸ் சொல்றாங்க" என்கிறார்கள்.


















