Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு...
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென சரிந்த மணமகன், உயிரிழப்பு - அதிர்ச்சியில் மணமகள் மயக்கம்
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் திருமண கொண்டாட்டம் ஒன்று சோகத்தில் முடிவடைந்துள்ளது. பாட்னாவில் ஆயுஷ் மருத்துவராகப் பணியாற்றிய பவன்குமார் என்பவர், குடியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் மணமகளின் வீடு இருக்கும் கிராமமான தீரா சந்த்பூரில் நடந்தது.
மணமகன், மணமகள் ஊருக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணமான அடுத்த நாள் பவன் தனது மனைவியை தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அவரது கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதிக்க உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் ஒருபுறம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் மணமக்களை ஆசீர்வதித்துக்கொண்டிருந்தனர்.

மணமக்கள் மேடை இருக்கையில் அமர்ந்திருந்தனர். விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து பரிசுகளை கொடுத்துவிட்டு ஆசீர்வதித்து சென்று கொண்டிருந்தனர்.
கொண்டாட்டங்கள் முடிவடையும் தருவாயில் இருந்தபோது பவன் திடீரென மேடையில் சரிந்து விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் அதிர்ச்சியில் உறைந்தார். அங்கு இருந்தவர்கள் உடனே மணமகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அங்கிருந்த டாக்டர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பூர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கொண்டு சென்றபோது பவன் இறந்திருந்தார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் திருமண வரவேற்பு வீடு துக்க வீடாக மாறியது. திருமணமான ஒரே நாளில் கணவன் இறந்த செய்தியை கேட்டு மணமகள் மயங்கிவிழுந்தார். திருமண வரவேற்புக்கு வந்தவர்கள் மணமகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டிய சோக நிலை ஏற்பட்டது.


















