செய்திகள் :

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை மிஞ்சும் வகையில் ஊருக்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள திருமண வீட்டில் நேற்று இரவு பேனர் கட்டுவது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் வந்த ஒருவர் தகராறில் ஈடுபட்ட நிலையில், ஊர் பெரியவர்கள் தலையிட்டுப் பிரச்சினையைச் சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் மாலை திருமண வீட்டின் அருகே மேளதாளத்துடன் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தினர் அலறியடித்து ஓடிய நிலையில், கும்பல் கண்ணில்பட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அருகிலுள்ள கடை ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள்மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (20) மற்றும் திருமண நிகழ்ச்சிக்காக மேளம் வாசிக்க வந்த மாடசாமி (19) ஆகிய 6 பேர் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ரமேஷ், அருள்மாறன், ராயப்பன் மற்றும் ராம்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கும்பல் தப்பிச் சென்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே 4 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண வீட்டில் புகுந்து நடத்தப்பட்ட இந்த அரிவாள் தாக்குதல் சம்பவம் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க