செய்திகள் :

திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

post image

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒன்றில் பா.ஜ.க-வும், மற்றொன்றில் சி.பி.எம் கட்சியும் வென்றன. தலைநகர் மாநகராட்சியான திருவனந்தபுரத்தில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 100 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 50 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. சி.பி.எம் கூட்டணி 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21-ம் தேதி பதவி ஏற்றனர். இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வி.வி.ராஜேஷ் மேயராக தேர்வானார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராக பதவி ஏற்ற வி.வி.ராஜேஷ் மற்றும்  துணை மேயராக பதவி ஏற்ற ஆஷா நாத் ஆகியோருக்கு மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி-யும், கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா தேர்தலில் போட்டியிடும்போதே பா.ஜ.க-வின் மேயர் வேட்பாளராக முன்னிலைபடுத்தப்பட்டார். அவர் வென்றதும் திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின. அதே சமயம் அவர் பா.ஜ.க-வில் சமீபத்தில்தான் இணைந்தார் என்பதாலும்... அரசியல் அனுபவம், சீனியாரிட்டி அடிப்படையில் மேயரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க தலைமையும், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் வலியுறுத்தியதாலும், சீனியர் நிர்வாகியான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தார்.

திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்

இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வி.வி.ராஜேஷ், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சபரிநாதன், சி.பி.எம் கூட்டணி சார்பில் சிவாஜி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க-வின் 50 வாக்குகள் மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலரின் வாக்குகளையும் சேர்த்து 51 வாக்குகள் பெற்று வி.வி.ராஜேஷ் வெற்றிபெற்றார். சி.பி.எம் வேட்பாளர் 29 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 17 வாக்குகளும் பெற்றனர். இதற்கிடையே பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் கட்சிக்காக பலியானவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதாகவும், அவர்களின் பதவி பிரமாணம் சட்டப்படி செல்லாது என அறிவித்துவிட்டு பிற கவுன்சிலர்களைக் கொண்டு மேயர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சி.பி.எம் கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க