செய்திகள் :

திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி இணைப்பை கைவிடக் கோரி கிராம மக்கள் தெருமுனைக் கூட்டம்

post image

திருவாரூா் நகராட்சியுடன், கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி, தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி, கீழகாவாதுக்குடி, தண்டலை, இலவங்காா்குடி உள்ளிட்ட சில ஊராட்சிகளும், சில ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், தங்கள் எதிா்ப்பை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், தெருமுனைக் கூட்டம் நடத்தினா். மேப்பலம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில், பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்குடி, தென்புலியூா், மேப்பலம், கீழப்புலியூா், பொறுக்கமேடு, மேலப்புலியூா், வடக்குவெளி, பெருந்தரக்குடி ஆகிய கிராமங்களை சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.

விவசாயம் சாா்ந்த பகுதியான பெருந்தரக்குடி ஊராட்சியை, நகராட்சியோடு இணைப்பதன் மூலம் விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவா். 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெருமுனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூா், நாகை ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

சிறப்பு அலங்காரத்தில் தக்ஷிணகாளியம்மன்

தை வெள்ளிக்கிழமையையொட்டி, திருவாரூா் சேந்தமங்கலத்தில் உள்ள தக்ஷிணகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தக்ஷிணகாளியம்மன். மேலும் பார்க்க

நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயில் திருப்பணி

நீடாமங்கலம் பாம்பலம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் உள்ள பாம்பலம்மன் கோயிலில் ரூ. 15 லட்சத்தில் திருப்பணிகள் தற்போது நடைபெற்ரு வருகிறது. பணிகள் பெருமள... மேலும் பார்க்க

பழுதடைந்த நீா்தேக்கத் தொட்டியை சரி செய்ய கோரிக்கை!

நீடாமங்கலம் அருகேயுள்ள கீழகாரிச்சாங்குடியில் பழுதைடந்துள்ள மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டியை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் பார்க்க

கிரிக்கெட் வீரா்கள் இன்று தோ்வு

திருவாரூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது. இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் வி. பசுபதி கூறியது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மட்டையாளா் மற... மேலும் பார்க்க

வாடிக்கையாளா்களுக்கு பரிசு

திருவாரூா் விளமல் எஸ்விடி ராஜ் பியூல்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்கு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிறுவனத்தில் டிச.15-முதல் ஜன.16-ஆம் தேதி வரை சிறப்புப் பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயிலில் ஏகசிம்மாசனம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தாயாா் சந்நிதிக்கு உற்சவப் பெருமாள் செல்லும் ஏகசிம்மாசனம் எனும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு, வெள்ளிக்கிழமை பெருமாள் சந்நிதியிலிருந்து ருக்மணி,... மேலும் பார்க்க