செய்திகள் :

திரைகக்தை மன்னன் கே.பாக்யராஜ் vs நம்ம கே.பாக்யராஜ்! - திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்

post image

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.

2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, எஸ்.ஏ சந்திரசேகர் வழிகாட்டுதலில் ’திரைகக்தை மன்னன்’ கே. பாக்யராஜ்’ அணியும் இயக்குநர் சேரன் தலைமையில் ’நம்ம கே.பாக்யராஜ்’ அணியும் போட்டியிட்டன.

நேற்று காலையிலிருந்து நடந்த  விறுவிறுப்பான வாக்குப்பதிவில் இயக்குநர்கள், திரைப்பட எழுத்தாளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

எஸ்.ஏ சந்திரசேகர் மனைவி சோபாவுடன் வந்து வாக்களித்தார்.

மாலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முக்கியப் பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளை சேரன் அணி கைப்பற்றியது.

எஸ்.ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ. சந்திரசேகர்

தலைவராக சேரனும் துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி, சிநேகன் இருவரும் தேர்வானார்கள். செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகரும் பொருளாளராக ஆர். சுந்தர் ராஜனும் தேர்வு செய்யப்பட்டனர். 4 இணைச் செயலாளர் பதவிகளில் ஒரு பதவி மட்டும் இந்த அணிக்கு கிடைத்தது.

மீதமுள்ள 3 இணைச் செயலாளர் பதவிகளையும் செயற்குழு உறுப்பினர்களில் 12 இடங்களில் 8 இடங்களையும் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி பிடித்தது.

சேரன்
சேரன்

ஆக மொத்தமுள்ள 21 இடங்களில் சேரன் தலைமையிலான ’நம்ம கே பாக்யராஜ்’ அணி 10 இடங்களையும் வி.சி குகநாதன் தலைமையில் போட்டியிட்ட திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் அணி 11 இடங்களையும் வென்றன.

முக்கியப் பதவிகள் ஒரு அணிக்கும் பெரும்பான்மை இடங்கள் இன்னொரு அணிக்கும் கிடைத்திருப்பதால் நிர்வாகம் எப்படி நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!

பிதாமகன் : அன்பின் ஈரம்! | ஆதி தாமிரா | சினி'ஸ்கோப் 08

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!சினி'ஸ்கோப் 08பிதாமகன் : அன்பின் ஈரம்!”பெத்தவ புகையோடிப் போச்சேவளத்தவன் புகைகூட... மேலும் பார்க்க

National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

Jana Nayagan: "'ஜன நாயகன்' லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" - அ. வினோத் பேட்டி

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறா... மேலும் பார்க்க

Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்..." - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

"100 கோடி கொடுத்தாலும் இனி சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்; ஏன்னா..." - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன்... மேலும் பார்க்க