செய்திகள் :

`தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல; பாஜக-வின் சூழ்ச்சி' - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

post image

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடி இந்த நான்கு சட்டத்தொகுப்புகளைப் புகழ்ந்தார். மோடி ஒரு விஷயத்தைப் புகழ்ந்தால் அதை நாம் எதிர்மறையாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகளும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடியது. 150 ஆண்டுக்காலப் போராட்டத்தில் பெற்ற பல உரிமைகளை இந்த சட்டத்தொகுப்புகள் பறிக்கின்றன. குறிப்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைத்தன்மை குறித்த 13 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன்

இந்த சட்டத்தொகுப்பில் 300 பேருக்கு கீழ் இருக்கக்கூடிய நிறுவனங்களில் நிலை ஆணை தேவையில்லை என்று உள்ளது. இந்தியாவில் 74 சதவிகித தொழிற்சாலைகள் 300 பேருக்கு கீழே இயங்கக்கூடியவை ஆகும். இந்த ஆலைகளை மூடுவது என்றால் அரசு அனுமதி தேவையில்லை. குறிப்பாக அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 38,000 கோடி ரூபாய் உள்ளது. இந்த புதிய நான்கு சட்டத்தொகுப்புகளில் நல வாரியத்திற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. தொழிலாளர் நீதிமன்றங்களில் 12,00,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புதிய சட்டத்தொகுப்பில் தொழிலாளர் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்புச் சட்டம் பற்றி இந்த நான்கு தொகுப்புகளிலும் எதுவும் இல்லை. எதற்காக இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன? மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள அரசு. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இந்த நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு 2014, 2017 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அமர்வு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தனி நீதிபதி நிராகரிக்க முடியாது. இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல. பாஜக-வின் அரசியல் சூழ்ச்சி. மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் உரிமைப் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை ஆகியவற்றிற்காகப் போராடி வருகிறோம். ஆனால், பாஜக எங்கே கலவரம் ஏற்படுத்தலாம்; மோதலை தூண்டலாம் என்று செயல்படுகின்றது" என்றார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க