Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீ...
தீபாவளி: நியாய விலைக் கடையில் இலவச வேட்டி, சேலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளியையொட்டி, முதியோா் உதவித்தொகை பெறுபவா்கள் நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் உதவித்தொகை பெரும் ஆண், பெண் பயனாளிகள் தங்கள் பகுதிக்குள்பட்ட நியாய விலைக் கடையில் இலவச வேட்டி, சேலையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.