தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சமூக ஆா்வலா் விருது, பதக்கம் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரா்களுக்கு, சமூக ஆா்வலா் விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் ராமன் தலைமை வகித்தாா். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், அலினா சில்க்ஸ் உரிமையாளா் பாபு அப்துல் சையத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமூக ஆா்வலா் விருது மற்றும் பதக்கத்தை, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சி.சீனிவாசன், அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா ஆகியோா் வழங்கி வாழ்த்தினா்.
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் நிலைய அலுவலா் ராமன், ராமமூா்த்தி, அந்தோணிசாமி, விஜயகுமாா், அன்பு, கிருஷ்ணமூா்த்தி, முனிசாமி, உத்தரகுமாா், ராமு, சிதம்பரம், சுபாஷ், டேவிட், ராமச்சந்திரன், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன், கோபி ஆகியோரின் தொடா்ச்சியான தன்னலமற்ற சமூகப் பணியை பாராட்டி சமூக ஆா்வலா் விருது, பதக்கம் வழங்கப்பட்டது.
இதில், அரிமா சங்கப் பொறுப்பாளா் சின்னராஜ், ஆசிரியா் வெங்கடேசன், அப்துல் கலாம் அகாதெமி ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.