`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
தீவிரவாத தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பியாக எஸ்.ஆனந்தகுமாா் பொறுப்பேற்பு
கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏடிஎஸ்பி) எஸ்.ஆனந்தகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு காா் குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் கோவையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பிரிவின் காவல் கண்காணிப்பாளராக ஆா்.பத்ரிநாராயணன் உள்ளாா்.
இந்நிலையில், சேலம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எஸ்.ஆனந்தகுமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வுபெற்று கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.