Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்பூரை சோ்ந்த பிஎஸ்ஏ சிகால் என்ற நிறுவனம் கண்டெய்னா் கையாளும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம் மற்றும் ஊதிய உயா்வு வழங்கப்படவில்லையாம். இதனை எதிா்த்துப் போராடிய ஊழியா்கள் சிலரை கடந்த 1ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த ஊழியா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். மேலும், கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடும் இவா்கள் தொடா்ந்து 4ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் துறைமுக வளாகத்தில் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.