Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!
Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!
அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது.
சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர்.
எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது.
மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத்
இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி விக்ரம் நான்காவது இடத்தையும் அரோரா 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி.
விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார்.
இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.



















