செய்திகள் :

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மார்கழி மாதம் என்பதால், முருகசெல்வி, அப்பகுதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு அதிகாலையில் பஜனை குழுவுடன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம்.

சேர்ந்தமரம்

ஆனால், நேற்று காலை அவர் பஜனைக்கு வரவில்லையாம். இந்த நிலையில், வழக்கமாக முருகசெல்வியின் வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், முருகசெல்வியின் வீட்டின் குளியலறை குழாயில் இருந்து ரத்தம் கசிந்து வருவதாகக் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர், சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம், நகைக்காகவா அல்லது வேறு ஏதும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முருகசெல்வியின் செல்போன் அழைப்புகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகசெல்வியின் வீட்டிற்கு தினமும் பால் கொண்டு வரும் சரத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சேர்ந்தமரம் காவல் நிலையம்

அவரிடம் நடத்திய விசாரணையில், ”எனக்கு கடன் பிரச்னை உள்ளது, தனியாக உள்ள முருகசெல்வியிடம் நகையை பறித்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதால்,  முருகசெல்வியை நானே கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட முருகசெல்விக்கும், கைது செய்யப்பட்ட பால்காரர் சரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சரத்,  முருகசெல்வியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சரத்திட,ம் இருந்து 4 சவரன் தங்கநகை, கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்க ம்பியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.     

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க