செய்திகள் :

தெலங்கானாவில் வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்ட ஐஎம்டி!

post image

ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் (ஹைதராபாத்) தனது வானிலை முன்னறிவிப்பில், தெலங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என்ற எச்சரித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு அடிலாபாத், குமுரம் பீம் ஆசிபாபாத், மஞ்செரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜக்தியால், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் பெத்தபள்ளி ஆகிய இடங்களில் வெப்ப அலை நிலைகள் நிலவக்கூடும் என்றம் அதே வேளையில், அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றது. மேலும், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடரும் என்ற முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஹைதராபாத் மற்றும் அண்டை மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு கீழ் இருக்க வாய்ப்புள்ளது.

ஹைதராபாத், ரங்காரெட்டி, விகராபாத், மேட்சல்-மல்கஜ்கிரி, சங்கரெட்டி மற்றும் மேடக் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில், ஹைதராபாத்தில் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை சராசரி அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பதாக தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்டமிடல் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோல், தெலங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 40.9 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பதாக தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த மாதம் வட்டி விகிதங்களை குறைக்கும் ஆா்பிஐ!

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

தொடா்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியிலும் சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் ஏற்றுமதி கடந்த ... மேலும் பார்க்க

ஹோண்டா காா்கள் விற்பனை 21% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டிய சாய் கிங்ஸ்

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ரூ.6,848 கோடி மதிப்பிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த வருடத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததில் ரூ.6,848 கோடி வருவாய் ஈட்ட... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!

மும்பை: நேர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலருக்கு மத்தியில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது.அமெரிக்காவின் பொருள... மேலும் பார்க்க

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,131 புள்ளிகள் உயர்வு!

மும்பை: நேற்றைய ஏற்றத்தை நீட்டிக்கும் விதமாக, மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,215.81 புள்ளிகள் உயர்ந்து 75,385.76 புள்ளிகள் இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச் சந்தையா... மேலும் பார்க்க