தேசிய கராத்தே போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
ஜப்பான் ஹயாசிகா சித்தோரியோ கராத்தே சாா்பில், 2 ஆவது லயன் கிட்ஸ் தேசிய அளவிலான கராத்தே போட்டி தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை பல்கலைக் கழகத்தில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி தா்ஷனா, 7 ஆம் வகுப்பு மாணவா் தா்னிஷ் ஆகியோா் கராத்தே சண்டை பிரிவில் முதலிடத்தையும், கத்தா பிரிவில் (செயல்முறைப்பிரிவு) மூன்றாமிடதையும் பெற்றனா். இதையடுத்து, பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த மாணவ, மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், வெள்ளிக்கிழமை பரிசளித்துப் பாராட்டினாா். பள்ளி முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் உடனிருந்தனா்.