செய்திகள் :

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

post image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும் மாலை 5 மணியளவில் வெளியில் சென்று இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரினைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்கப்பட்ட உடல்கள், காணாமல் போன ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

மேலும் சிறுவர்களின் பெரியப்பா, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இருவருக்கும் கூழ் வாங்கித் தந்ததாகவும், அப்போது அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (19) என்ற இளைஞர் சிறுவர்களை அழைத்துச் சென்றதாகவும், கூறிய தகவலை அடுத்து கேசவ் பாலாஜியை அழைத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவர்களை அழைத்துச் சென்ற கேசவ் பாலாஜி, கிணற்றுக்குள் புறா இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி, இருவரையும் 150 அடி ஆழக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

Murder
Murder

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள கேசவ் பாலாஜியிடம் கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு சிறுவர்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க