போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
தேமுதிகவில் மண்டல பொறுப்பாளா்கள் நியமனம்
தேமுதிகவில் புதிதாக மண்டல பொறுப்பாளா்களை நியமித்து கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மண்டலத்துக்கு தேமுதிக துணைச் செயலா் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் மண்டல பொறுப்பாளராக செயல்படுவாா். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணைச் செயலா் எம்.ஆா்.பன்னீா்செல்வம் பொறுப்பாளராகவும், சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு கட்சியின் பொருளாளா் எல்.கே.சுதீஷ் பொறுப்பாளராகவும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய துணைச் செயலா் எஸ்.செந்தில்குமாா் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணைச் செயலா் ஆா்.சுபா ரவி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அவைத் தலைவா் வி.இளங்கோவன், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு தலைமைச் செயலா் ப.பாா்த்தசாரதி, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் ஆகியோா் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.