செய்திகள் :

தேர்தலில் 'டெபாசிட் காலி'னு சொல்றாங்களே; அப்படியென்றால் என்ன?

post image

லை'டெபாசிட்டே போயிடுச்சு', 'டெபாசிட் காலி' போன்ற வார்த்தைகளை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அடிக்கடி கேட்டிருப்போம்.

ஆனால், அப்படி என்றால் என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா... அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதில்.

வங்கியில் எப்படி குறிப்பிட்ட ஒரு தொகையை டெபாசிட் செய்து வைக்கிறோமோ... அதே போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாகச் செலுத்த வேண்டும்.

தேர்தல்
தேர்தல்

யார் எவ்வளவு செலுத்த வேண்டும்?

அந்த வேட்பாளர் குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகியிருக்கும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால்தான், அந்த வேட்பாளருக்கு டெபாசிட் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

இல்லையென்றால், அந்த டெபாசிட் தேர்தல் ஆணையத்திற்கே சென்று சேர்ந்துவிடும்.

இப்படி தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் பெற முடியாமல் போகும் வேட்பாளர்களையே டெபாசிட் இழந்த வேட்பாளர்கள் என்று கூறுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.10,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.5,000-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.25,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.12,500-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

உதாரணம்

சென்னை ராயபுரம் தொகுதியின் ஸ்டார் வேட்பாளர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாக்குகளை வைத்து டெபாசிட் இழப்பு உதாரணத்தைப் பார்ப்போம்.

ராயபுரம் தொகுதியில் மொத்தம் 1,27,356 வாக்குகள் பதிவாகியுள்ளன.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் வரும் எண் அளவிற்கு ஜெயகுமார் வாக்குகள் பெற்றிருந்தால், அவர் டெபாசிட் பணத்தைப் பெறுவார். அப்படி இல்லையென்றால், அவருக்கு டெபாசிட் பணம் கிடைக்காது.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் 21,226 வாக்குகள் வருகிறது.

ஆனால், ஜெயகுமார் பெற்றிருக்கும் வாக்குகளோ 18,170.

21,226-க்கும் கீழ் எண்ணிக்கை வந்துள்ளதால், ஜெயகுமார் டெபாசிட் இழந்திருக்கிறார். அவருக்கு ரூ.10,000 மீண்டும் கிடைக்காது.

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க