திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்...
`தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார்' - பாமக அருள் பேச்சு
சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் உரையாற்றினார். அப்போது அவர், ``எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பாமக கட்சி. அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காக போராடி போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கிறார். சாதாரண மன உளைச்சல் அல்ல. இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம்? ராமதாஸ் அய்யா இருக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருந்தது. கட்டுப்பாடாக வைத்திருந்த நிலையில் அதை மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சித்து வருகிறது.

அன்புமணிக்குப் பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸ் ஐயாவை படுத்திக்கொண்டிருக்கின்ற பாடு அதிகம். அன்புமணி என்ன சாதனை செய்தீர்கள்..? என்ன தியாகம் செய்து உள்ளீர்கள். சிறையை பார்க்காத உங்களுக்கு பல பதவிகளை வாங்கிக் கொடுத்தவர் ராமதாஸ். இது போன்ற தந்தை கிடைத்திருந்தால் மரியாதையுடன் நான் இருந்திருப்பேன். இது போன்ற தந்தை யாருக்கும் கிடைக்க மாட்டார். ஆனால் அந்த தந்தையை இழந்து விட்டீர்களே..? இந்த தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார். மக்கள் ஒன்றாம் எண்ணில் ராமதாஸ்க்கு பின்னால் இருக்கிறார்கள். மக்கள் அன்புமணியை தூக்கி எறிந்துவிட்டார்கள். அந்த பூஜ்ஜியம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையில் பாமக இருக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதலமைச்சராக யார் வருவார் என்று ராமதாஸ் ஐயா முடிவு செய்வார்" என்றார்.














