செய்திகள் :

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்

post image

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலையில், தேர்தல் ஆணையம் இதை வெறும் அலுவலக கவனக்குறைவு (clerical error) என்று விளக்கியுள்ளது.

2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் கோரி, பாஜக கேரளா அலுவலக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதத்தில் பாஜக கேரளா அலுவலகத்தின் முத்திரை பதிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரதன் யு. கெல்கர் வெளியிட்ட அறிக்கையில், “வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 2019-ல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அந்த நெறிமுறைகள் பற்றிய விளக்கம் கேட்டு சமீபத்தில் கேரள பாஜக, மாநில தேர்தல் ஆணையத்த்தில் கடிதம் கொடுத்திருந்தது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை

அத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவின் நகலையும் இணைத்திருந்தனர். அதில் பாஜகவின் முத்திரை இடம்பெற்றிருந்தது. ஆனால் பாஜகவின் முத்திரை இருப்பதை கவனிக்காமல் தேர்தல் அதிகாரி அனுப்பியிருக்கிறார்” என்று விளக்கமளித்துள்ளார்.

பிழைக்கு காரணமான அலுவலக அதிகாரி விசாரணைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!

இதுவரை பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1962-ம் ஆண்டு அமலுக்கு வந்தது ஆகும். வருகிற 1-ம் தேதி முதல், புது வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய வருமான வரிச் சட்டத்தின் கொள்கைகள் மூன்று... மேலும் பார்க்க

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'மாறும்' வருமான வரிக் கணக்குத் தாக்கல் தேதிகள்: நோட் பண்ணுங்க

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.இந்த வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள மாற்றங்களைப் பார்க்கலாம்.> இனி (ஆடிட் அல்லாத) ITR - 3 மற்றும் 4-ன் வருமான வரித்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தன... மேலும் பார்க்க

`தனித்துப் போட்டியிட்டு திமுகவுக்குப் பாடம் புகட்டுவோம்!' கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. த.வா.க-வுக்குள்... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாய்மார்களின் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நிலையில், அதைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிய அந்த மாநிலத்தின் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்... மேலும் பார்க்க