செய்திகள் :

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

post image

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் டொயோட்டா கிளான்ஸா காரையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா
எம்.எல்.ஏ கார்த்திகேயன் - மேயர் சுஜாதா

இந்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், விளக்கமளிக்கவும் மார்ச் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறும் மேயர் சுஜாதாவுக்கு சத்துவாச்சாரி போலீஸார் இன்று சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

அதேபோல, வழக்கில் தொடர்புடைய தி.மு.க கவுன்சிலர் உட்பட மற்ற இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகரச் செயலாளருமான கார்த்திகேயனின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார் மேயர் சுஜாதா.

எனவே, `பரிசுப் பொருள் வழங்கியதில் கார்த்திகேயனுக்கும் தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திர... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-.... மேலும் பார்க்க

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசி... மேலும் பார்க்க

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர்... மேலும் பார்க்க