செய்திகள் :

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

post image

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

மரிய வில்சன் பேசியதாவது, ''கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது.

நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்'' என்றார்.

மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்து அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அப்போதுதான் மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியையும் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-.... மேலும் பார்க்க

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசி... மேலும் பார்க்க

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர்... மேலும் பார்க்க