Iran War: Trump கோமாளித்தனம் - முட்டுக்கட்டையில் Peace Deal| US| Gulf
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில்..." - மக்கள் நம்பிக்கையை தகர்த்தார்களாக ராஜினாமா எம்எல்ஏ-க்கள்?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இந்திய அளவில் உற்றுநோக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மாறி வரும் சூழலில், எஸ்.பி. வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறை (அதிமுக) எம்.எல்.ஏ ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி ( அதிமுக) எம்.எல்.ஏ சத்யபாமா உட்பட 3 எம்.எல்.ஏ- க்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
த.வெ.க- வில் இணைந்துள்ள இவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்களாக களம் காண இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலரிடம் பேசினோம், "வேட்பாளர் மீதான நம்பிக்கை மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு மதிப்பளித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். ஆனால், எங்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
முதல்வர் விஜய்யின் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறைந்தபட்சம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களிடம் முறையான அறிக்கை கூட வெளியிடவில்லை.
எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் இப்படி செய்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் என்கிற பெயரில் என்னனென்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம். இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது" எனக் கொந்தளித்தனர்.














