செய்திகள் :

தொழிலுக்காக தந்தை வைத்திருந்த ரூ.50 லட்சம்; லாக்கரை திறந்து எடுத்து காதலிக்கு செலவு செய்த இளைஞர்!

post image

அசாம் மாநிலம் ஜோர்ஹட் என்ற இடத்தை சேர்ந்த யஷ் தனுகா அகர்வால்(25) என்ற வாலிபர், தனது குடும்பத்தினரின் லாக்கரை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யஷ் தனுகா அகர்வால் தான் திருடிய பணம் மற்றும் தங்க ஆபரணங்களை தனது காதலியுடன் ஆடம்பரமாக வாழவும், காதலிக்காகவும் செலவு செய்துள்ளார். கடந்த 11ஆம் தேதி அகர்வால் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் இருந்த லாக்கரை திறந்து இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்தது. அகர்வால் தந்தையின் அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டது.

இது குறித்து அகர்வால் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சைபர் செக்யூரிட்டி பிரிவின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், இது வீட்டில் இருப்பவர்களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு யஷ் அகர்வால் ஜோர்ஹட்டை விட்டு வெளியில் சென்று இருப்பதும் தெரிய வந்தது. யஷ் செல்போன் மூலம் போலீசார் அவர் அகமதாபாத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அகர்வால் தந்தை அகமதாபாத் சென்று தனது மகனை அழைத்து வந்து அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பர்கள் ஜிது சோமானி மற்றும் ரோஹித் பிரசாத் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டியதும், அவர்கள் இரண்டு பேரும் பணத்தை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதும், அதை எப்படி செய்வது என்று வழிகாட்டவும் செய்துள்ளனர். பூட்டை திறக்கும் ஒருவரின் உதவியுடன் லாக்கரை திறந்துள்ளனர். அந்த பணத்தில் காதலியுடன் சேர்ந்து பார்ட்டி என ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். காதலி பூபாலிக்காக 5 லட்சம் செலவு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. யஷ் தனது நீண்ட நாள் காதலியான பூபாலி தத்தாவுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு ஐபோன் வாங்கி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் திருடிய பணத்தில் பூபாலியுடன் பல நாட்கள் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் கழித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் யஷ் நண்பர்கள் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் காதலியை குற்றவாளியாக சேர்க்கவில்லை. அவரிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்திற்காக வீட்டில் பணம் வைத்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பிரிட்டன் டு கொல்லம்; மனைவியின் அந்தரங்க வீடியோவை ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் - கைதுசெய்த போலீஸ்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரிட்டனில் வேலை செய்துவந்தார். அவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் பிரிட்டனில் வசித்துவந்தார். இதற்கிடையே ஊருக்கு குடும்பத்துடன் வந்த ... மேலும் பார்க்க

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!

"மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்தான்" என்பதை உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பலூன் ஊதும்போது தொண்டையில் சிக்கி விபரீதம்; 6 வயது சிறுவன் பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரம் செய்யும் தம்பதி குமார் - சத்யா. இவர்களுக்கு 6 வயதில் சோம்நாத், சேஸ்நாத் என்று இரட்டையர் உட்பட மூன்று மகன்க... மேலும் பார்க்க

ஆவடி: திருமணம் மீறிய நட்பு; பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை - முதியவர் சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க