செய்திகள் :

தொழில்நுட்ப உலகில் மீண்டும் Layoff: 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் Canva-வின் அதிரடி மாற்றம்!

post image

பிரபல ஆன்லைன் வடிவமைப்புத் தளமான Canva, தனது பணியமைப்பில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் 1,271 ஊழியர்கள்... நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 22 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை முழுவதும் பணிநீக்கம் என்று பொருளல்ல; சிலருக்கு பணிப் பொறுப்புகள் மாறலாம், சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம், மற்றவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம்.

Canva தலைமைச் செயல் அதிகாரி மெலனி பெர்கின்ஸ், நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் முதன் முறையாக மந்தமடைந்துள்ளதாக ஊழியர்களுக்கு எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சிறிய, விரைவாக முடிவெடுக்கக்கூடிய குழுக்களை உருவாக்கவும், நிர்வாக அடுக்குகளைக் குறைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக Product, Growth, Platform ஆகிய பிரிவுகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவருகிறது. மேலும், பல தயாரிப்புக் குழுக்களின் முக்கியத் தளமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை மாற்றவும் முடிவு செய்துள்ளது.

Canva

பணியை விட்டு வெளியேறுபவர்களுக்கு குறைந்தது ஆறு மாதச் சம்பளம், சில நாடுகளில் 12 மாத மருத்துவக் காப்பீடு, வேலை தேடுவதற்கான உதவி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்குவதாக Canva கூறியுள்ளது. சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் ஊழியர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் நிதியுதவியும் வழங்கப்படும். மேலும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட MacBook-laptop ஐ-த் தங்களிடமே வைத்துக்கொள்ளலாம் என்று CEO-வின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு, செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் சூழலில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் பரந்த போக்கின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், Canva தனது அறிவிப்பில் பணியாளர் மாற்றங்களுக்கு AI-ஐ நேரடிக் காரணமாகக் குறிப்பிடவில்லை.

வானிலிருந்து விழும் 1.5 டன் விண்கலம்: இந்தியாவுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

சுமார் 1.5 டன் எடை கொண்ட நாசாவின் விண்வெளித் தொலைநோக்கி ஒன்று, தனது 22 ஆண்டுக்கால பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்புகிறது. கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையவிருக்கும் இந்த வ... மேலும் பார்க்க

இரவிலும் சூரிய ஒளி: இந்திய நிறுவனத்துடன் அமெரிக்க ஸ்டார்ட்அப் ஒப்பந்தம் - வரவேற்பும் கவலையும்!

இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital நிறுவனம், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பி, சூரிய ... மேலும் பார்க்க

2027-ல் 200-க்கும் மேற்பட்ட AI நிறுவனங்களுக்கு ஆபத்து? எச்சரிக்கும் எலான் மஸ்க்

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ.யின் வளர்ச்சியும் தாக்கமும் அதிகமாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஏ.ஐ.யின் ஆதிக்கம் உலகச் சந்தைகளில் இருந்து குறைந்து, போரின் த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் போன்… சில நாள்களிலேயே திரையில் விரிசல்! iPhone Duo-வுக்கு என்ன ஆச்சு?

மடிப்புப் பகுதியில் கோளாறா? புகார்கள் எதிரொலி… பாதிக்கப்பட்ட போன்களை மாற்றித் தரும் Apple!ரூ.3 லட்சத்துக்கும் மேல் கொடுத்து வாங்கிய புதிய போன். பயன்படுத்தத் தொடங்கிய சில நாள்களிலேயே திரையில் விரிசல் ஏ... மேலும் பார்க்க

Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

“Good science should end up in a glass of water!” - INTERVIEW WITH PROF. THALAPPIL PRADEEP

New Member of the VinFuture Prize CouncilVinFuture Special Prize Laureate 2022Prof. Thalappil Pradeep of IIT Madras has spent three decades turning nanoscience into something people can drink. His low... மேலும் பார்க்க