செய்திகள் :

தோல் இசைக்கருவிகள்: மதுரையின் நூற்றாண்டு பாரம்பரியத்தை சுமக்கும் ராகுல் இசைக்கருவியகம்!

post image

மதுரை சிம்மக்கல் பகுதியில் இயங்கி வரும் ராகுல் இசைக்கருவியகம், நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியத்துடன் தோல் இசைக்கருவிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தற்போது மூன்று தலைமுறைகளாக பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரிப்பைத் தொடர்ந்து வருகிறது. இதன் உரிமையாளராக மரிய சகாய பிரிட்டோ செயல்பட்டு வருகிறார்.

இங்கு பம்பை, உறுமி, தவுலு, மிருதங்கம், கஞ்சிரா, குடுக்கை, தபேலா, தப்பு, தமுக்கு, தண்டை, சிவவாக்கியம் உள்ளிட்ட 16 வகையான தோல் இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. சினிமா மற்றும் இசைப் பதிவுக் கூடங்களுக்குத் தேவையான இசைக்கருவிகள், அவற்றின் உதிரிப்பாகங்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

கருவிகள் தயாரிப்பதற்குத் தேவையான புதிய தோல்கள் ஆம்பூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆட்டுத்தோல் மற்றும் எருமைக் கன்றின் தோல் உள்ளிட்ட தரமான தோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையிலும் இசைக்கருவிகள் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அதன் தன்மைக்கேற்ப தயாரிப்பு காலம் மாறுபடுகிறது. குறிப்பாக, ஒரு தபேலாவைத் தயாரிக்க குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை ஆகிறது. கருவிகளின் மரப்பகுதிக்குத் தேவையான பொருட்கள் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெறப்படுகின்றன. சில உலோகப் பகுதிகளும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.

இங்கு விற்பனை செய்யப்படும் தோல் இசைக்கருவிகள் பழுதடைந்தால் அவற்றைப் பழுதுநீக்கி சீரமைக்கும் வசதியும் உள்ளது. இதனால் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் இசை துறையினரும் இந்த கடையை தொடர்ந்து நாடி வருகின்றனர்.

மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையேயும் ராகுல் இசைக்கருவியகம் கவனம் பெற்றுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாங்கிச் செல்கின்றனர்.

நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு மத்தியிலும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட கைவினைத் திறனைப் பாதுகாத்து, பாரம்பரிய தோல் இசைக்கருவிகள் தயாரிப்பை ராகுல் இசைக்கருவியகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்நிறுவனம், தமிழரின் பாரம்பரிய இசை மரபைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.!

`லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாளுவோம்.!" - மரபின் அடையாளம் காக்கும் மழையூர் இளைஞர்கள்

லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாண்டு..!கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளும், மாதாந்திரச் சம்பள உத்திரவாதமும் சிவப்புக் கார்பெட் விரித்து அழைத்தாலும், "எங்க பரம்பரைத் தொழிலை நாங்க விட்டுக் க... மேலும் பார்க்க

“நூற்கலை முதல் சுவரோவியம் வரை... கைகளே என் மூலதனம்” – சட்டக் கல்லூரி மாணவர் கேசவனின் கலைப் பயணம்!

ஆர்வம், கற்பனை, தொடர் பயிற்சி... இவற்றைத் தனது கைகளோடு இணைத்து ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார் கேசவன்.சட்டப் படிப்புக்கு மத்தியில் கலைப் பயணத்தையும் தொடர்ந்து வ... மேலும் பார்க்க

வணக்கம் சென்னை கண்காட்சி: பழைய மெட்ராஸின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிய அரிய கண்காட்சி!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நிறைவு பெற்றது.மெட்ராஸ் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தைய... மேலும் பார்க்க

Velpari Drama: '40 பெண் கலைஞர்கள், ஒரு மாத பயிற்சி, 3 மணிநேர நீளம்'- நாடகவடிவில் மேடை ஏறிய வேள்பாரி!

இது வரையில் எழுத்து வடிவத்தில் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர்களுக்கு விருந்தளித்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் கலை வடிவில் நாடகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேறியது. வீனிக்ஸ் கலைக்குழு மற... மேலும் பார்க்க

VIT: "படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்"- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி' விருது

ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் ... மேலும் பார்க்க