செய்திகள் :

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

post image

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வந்தது.

பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.

தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மகனுடன் அமிதாப் வருகை
மகனுடன் அமிதாப் வருகை

ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தர்மேந்திரா சாமானிய மக்களின் ஹீரோ என்று கூறி நீண்ட ஒரு பதிவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தர்மேந்திராவின் மரணம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு.

தர்மேந்திரா ஜியின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் ஒரு சின்னத்திரை ஆளுமை; அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கவர்ச்சியையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு தனித்துவமான நடிகர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நடிகை ஜெயபிரதா ஆகியோரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். தர்மேந்திராவின் மரணம் குறித்த செய்தி இணையத்தில் பரவத் தொடங்கியவுடன், கரண் ஜோஹர், கஜோல், கரீனா கபூர் கான் மற்றும் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மறைந்த நடிகரை சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்து மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நடிகை ஹேமா மாலினி - நடிகர் தர்மேந்திரா
நடிகை ஹேமா மாலினி - நடிகர் தர்மேந்திரா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

பலத்த பாதுகாப்புடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சூழ, குடும்பத்தினர் முன்னிலையில் தர்மேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தர்மேந்திரா இறப்பதற்கு முன்பு கடைசியாக சமூக வலைத்தள பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி ஹேமாமாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது.

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க

IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று ... மேலும் பார்க்க

Alpha Beard: தாடிக்குள்ளே 26 ஆங்கில எழுத்துக்கள்; பிரிட்டன் கலைஞரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாடி மற்றும் மீசையை ஆங்கில அகரவரிசையின் 26 எழுத்துக்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.'A' முதல் 'Z' வரையிலான அனைத்து எழுத்துக்களையும் தனது முகத்தில் உள்ள முடிக... மேலும் பார்க்க