செய்திகள் :

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! - பின்னணி என்ன?

post image

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியானப் படம் 'மன்னர் வகையறா'. இந்தப் இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றிருக்கிறார்.

மன்னர் வகையறா
மன்னர் வகையறா

படம் வெளியான பிறகும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியிருக்கிறார்.

அந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதனைத்தொடர்ந்து செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது கோபி தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்திருக்கிறார். அதில், "விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனைய விதிக்கிறேன். வாங்கிய செக் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

விமல்
விமல்

இந்த தீர்ப்பை வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' ரிலீஸ்: ஈரோடு அண்ணா சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் க... மேலும் பார்க்க

Jana Nayagan: ஈரோடு தியேட்டர்களில் 'ஜன நாயகன்'; ரசிகர்கள் கொண்டாட்டம்! | Photo Album

ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில... மேலும் பார்க்க

Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'?

காவல் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். அங்கு தளபதிக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) அவருடைய மகள் விஜியுடனும்... மேலும் பார்க்க

ஜனநாயகன் FDFS: புதுக்கோட்டையில் கண்ணீர் விட்ட அமைச்சர் பார்வேஸ்.! | Video

நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்குத் திரைக்கு வந்திருக்கிறது தமிழக முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம்.புதுக்கோட்டையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் காலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண... மேலும் பார்க்க

Jana Nayagan: "ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, FDFS-ஆ பார்க்க போறேன்!" - அர்ச்சனா கால்பத்தி | Live Updates

'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி பதிவு "இத்தனை வருடங்களாக ரசிகர்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத தருணங்களை வழங்கியிருக்கிறீர்கள் விஜய் சார். உங்கள் இந்த அற்புதமான பயணத்தில் ஜனநாயகன்... மேலும் பார்க்க