செய்திகள் :

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

post image

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேசிய அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மாணவர் பங்கேற்பு, பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைத்தல், ஆசிரியர்கள் இருப்பு, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடக் கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பள்ளிகளில் 3.9 சதவீதப் பள்ளிகளை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர்களில் 5 சதவீத மாணவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் கல்வியளித்து வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விடப் பெரியதாகவும், அங்குள்ள கல்வி உள்கட்டமைப்புகள் மிகச் சரியான முறையிலும், திறம்படவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர் சேர்க்கை விகிதமானது (GER) ஆரம்பக் கல்வி முதலே மிக உயர்வாக நீடித்து வருகிறது. தொடக்கப் பள்ளி அளவில் மாணவர் சேர்க்கை 92 சதவிகிதமாகவும், நடுநிலைப் பள்ளி அளவில் (Upper Primary) 95 சதவிகிதமாகவும் உள்ளது. நடுநிலைப் பள்ளி சேர்க்கையானது கடந்த ஆண்டின் 98 சதவிகிதத்திலிருந்து சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், உயர்நிலைப் பள்ளி அளவில் (Secondary) மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், மேல்நிலைப் பள்ளி அளவில் (Higher Secondary) 85 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு கல்வித் துறையின் மிக முக்கிய மைல்கல்லாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவுகளில் பள்ளி விலகல் (Dropout Rate) விகிதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, 0% (பூஜ்ஜியம்) என்ற வரலாற்றுச் சாதனை தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நிலைப் பள்ளி அளவில் பள்ளி விலகல் விகிதம் வெறும் 6.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது தேசிய சராசரியான 9.5 சதவீதத்தை விடப் பல மடங்கு மிகக் குறைவாகும்.

மாணவர்களைப் பள்ளியில் தக்கவைக்கும் விகிதத்தைப் பொறுத்தவரை, தொடக்கப் பள்ளியில் 94 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பு வரை 96 சதவீதமாகவும் இருந்து, மேல்நிலைப்பள்ளிக்கு வரும்போது 75.9 சதவீதமாகக் குறைகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் தேசிய அளவிலான போக்கே இங்கும் எதிரொலித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 18 லட்சம் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தனியார் பள்ளிகளில் 62 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 43 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் பயின்று வருகின்றனர். இது தவிர, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்து தங்களது கல்வியைத் தொடர்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ... மேலும் பார்க்க

Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள்... மேலும் பார்க்க

ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணிநேரம்; கல்குவாரியால் வறண்ட ஊற்று! – கட்சிராயன்பட்டி மக்கள் வேதனை

கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்ட ஊற்று கல்குவாரியால் வறண்... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு!

இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது. அந்த மாற்றங்கள்&g... மேலும் பார்க்க

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை - வேட்டி: முதல்வருக்கு நன்றி" - நெசவாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெள... மேலும் பார்க்க