செய்திகள் :

தமிழ் சினிமாவின் எதார்த்தக் கேமரா கண் மறைந்தது; ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமானார்

post image

தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான ஒளிப்பதிவாலும், அழுத்தமான படைப்புகளாலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) இயற்கை எய்தினார்.

அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செழியன், காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்தார்.

சிறு வயது முதலே ஓவியம் மற்றும் புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

பி.சி. ஸ்ரீராமுடன் செழியன்
பி.சி. ஸ்ரீராமுடன் செழியன்

'தம்பி' திரைப்படத்தில் கூடுதல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவருக்கு, 2007-ஆம் ஆண்டு வெளியான 'கல்லூரி' திரைப்படத்தில் ஒரு முழுமையான ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 'ரெட்டைசுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்கு பருவக்காற்று' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். குறிப்பாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'பரதேசி' (2013) திரைப்படத்தில் இவருடைய அசாத்தியமான ஒளிப்பதிவு, சர்வதேச அளவில் லண்டன் திரைப்பட விழா விருது (BFI), எடிசன் விருது மற்றும் ஆனந்த விகடன் சினிமா விருது உள்ளிட்ட பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது.

மேலும், சமூக அவலங்களைப் பேசிய 'ஜோக்கர்' மற்றும் 'தாரை தப்பட்டை', 'சவாரி' ஆகிய திரைப்படங்களிலும் இவரது கேமரா வேலைப்பாடுகள் தனித்துத் தெரிந்தன.

அப்துல் கலாம் - ஜெயகாந்தனுடன் செழியன்
அப்துல் கலாம் - ஜெயகாந்தனுடன் செழியன்

ஒளிப்பதிவாளராக மட்டுமன்றி, ஒரு சிறந்த இயக்குநராகவும் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றார் செழியன். அவர் இயக்கி, அவரது மனைவி பிரேமா அவர்களின் 'லா சினிமா' தயாரிப்பில் வெளியான 'டூ லெட்' (To Let) திரைப்படம், வாடகை வீடு தேடி அலையும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வலியை மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது.

இத்திரைப்படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான' உயரிய விருதைத் தட்டிச் சென்றதுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது.

திரைப்படம் தாண்டி மிகச்சிறந்த எழுத்தாளராகவும் செழியன் திகழ்ந்தார். ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய 'உலக சினிமா' என்ற தொடர், உலகத் திரைப்படங்களை தமிழ் வாசகர்களுக்கு மிக எளிமையாக அறிமுகம் செய்தது.

2004-ல் அவரது 'ஹார்மோனியம்' சிறுகதைக்காக மதிப்புமிக்க 'கதா விருது' பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் ஆவணப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் 'கொன்றால் பாவம்' மற்றும் 2026-ல் 'மைலஞ்சி' உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் கலைத்தன்மையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு உன்னதப் படைப்பாளியின் மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கன்னத்தில் முத்தமிட்டால் : தாயின் பாடல் | அமுதாவின் கேள்விக்கு பதில்? | `சினி'ஸ்கோப் 05

`சினி'ஸ்கோப் 05கன்னத்தில் முத்தமிட்டால் : தாயின் பாடல்!ஒன்பது வயதே ஆகும் அமுதா, மிகப்பெரிய ஒரு போராட்டத்திற்கு பின்னர், தான் விருப்பப்பட்டபடியே தன்னை ஈன்ற அம்மாவைச் சந்திக்கிறாள். இந்தச் சந்திப்பு இத்... மேலும் பார்க்க

இயக்குநர் பாரதிராஜாவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி; குடும்பத்தினருடன், சீமான் சடங்கு செய்து மரியாதை!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி இன்று தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது.பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி ... மேலும் பார்க்க

`தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?' - `கொடி' அரசியலின் பின்னணி என்ன?

நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அடுத... மேலும் பார்க்க

'சினிமா பிடிக்காமலேயே துறைக்கு வந்தவர் தனுஷ்; அழுதுகொண்டேதான் நடிப்பார்' - கஸ்தூரி ராஜா ஷேரிங்ஸ்

'லவ் ஓ லவ்' படத்தின் ப்ரீ - ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, " செல்வராகவன் தான் சினிமா பிடித்து வந்தார். தனுஷிற்கு சி... மேலும் பார்க்க

PR Show: ஒரு கதை, ஒரு படம்; ஆனால் 6 இயக்குநர்கள் - இந்த 'ஆல்ஃபா யூனிட்'டின் ஸ்பெஷல் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போ... மேலும் பார்க்க

ரன் ரீரிலீஸ்: "விஜய் சார் 'ரன்' படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - லிங்குசாமி ஷேரிங்

இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.மாதவன், மீரா ஜாஸ்மி... மேலும் பார்க்க