செய்திகள் :

கரூர்: விறுவிறுப்பான ஏற்பாடுகள், பலத்த பாதுகாப்பு; முதல்வர் விஜய்யின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்! | Live

post image

கரூர் செல்லும் முதல்வர் விஜய்!

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளையும் வழங்குகிறார் எனச் செய்தி வெளியானதிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய்

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் கரூர் செல்வது தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `இப்போது செல்லும் முதல்வர், அப்போதைய த.வெ.க தலைவராக இருக்கும்போதே சென்றிருக்கலாம். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஆறுதலாக இருந்திருக்கும்' என விமர்சித்திருந்தார்.

த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள், `முதல்வர் ஆறுதல் தெரிவிப்பதோ, கருணை அடிப்படையில் உதவி செய்வதோ சரிதான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது' எனக் கருத்து தெரிவித்திருந்தன.

இதேபோல நாம் தமிழர் கட்சியின் சீமான், `திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணியா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில்தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்குத் தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடையும் முதல்வருக்கு, கார் மூலம் கரூர் மாவட்ட எல்லைகளான மாயனூர் மற்றும் புலியூர் வரும்போது தவெக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் பிரமாண்ட 'ரோடுஷோ' செல்கிறார்.

தொடர்ந்து, கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தால் முழு வீச்சில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்ட விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய் அரசுத் திட்டங்களை அறிவித்து சிறப்புரையாற்றுகிறார்.

தவெக விஜய் காரைக்குடி
தவெக விஜய் காரைக்குடி

முதலமைச்சரின் இந்த அதிரடிப் பயணத்தையொட்டி கரூரில் வரலாறு காணாத ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மத்திய மண்டல ஐஜி மற்றும் கரூர் மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில், வெளிமாவட்ட போலீசார் உட்பட மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் ரோடு ஷோ மற்றும் கார் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவிரி : ``நான் அப்படி சொல்லவில்லையே.!" - கர்நாடக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில்!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``கர்நாடகாவில் ... மேலும் பார்க்க

இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன்; காரணம் என்ன?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்எல்ஏ-வுமான கே.பி.அன்பழகன்.எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமண... மேலும் பார்க்க

`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' - அமைச்சர் ராஜ்மோகன்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் சாலை மறியலில் இறங்கிய பெண்கள்!

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே ... மேலும் பார்க்க

``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்... மேலும் பார்க்க

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலை... மேலும் பார்க்க