செய்திகள் :

நண்பர்களுக்கு வீடியோ காட்டிய காதலன்; 5 ஆண்டுகளில் மாணவியை வன்கொடுமை செய்த 62 பேர் - கேரளா அதிர்ச்சி

post image

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பான குடும்பஸ்ரீ அமைப்பின் சினேகித ஜென்டர் ஹெல்ப் டெஸ்க் மூலம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

தடகள வீராங்கனையான அந்த மாணவி, 13 வயது முதலே தனக்கு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் கோனி நிர்பயா சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டு சைக்காலஜிஸ்ட் மூலம் கவுன்சலிங் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைக்காலஜிஸ்டிடம் விவரித்துள்ளார். இலவும்திட்ட காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி தன்னை காதலன் உள்ப்பட 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கேரள போலீஸ்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி அளித்த பட்டியலில் 6 காவல் நிலைய எல்லைகளுக்குட்ப்பட்ட 64 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 34 பேரின் பெயர்களை மாணவி எழுதிக்கொடுத்துள்ளார். மேலும் 30 பேரின் மொபைல் எண்களையும் மாணவி தெரிவித்துள்ளார். 64 பேர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுபின்(24), சந்தீப்(30), வி.கே.வினீத்(30), கே.அனந்து(21), சுதி(24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுதி என்பவர் போக்ஸோ வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளார்.

பாலியல் கொடுமை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மாணவியின் காதலன் திருமணம் செய்வதாக கூறி மாணவியை முதலில் வன்கொடுமை செய்துள்ளான். மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு காட்டியுள்ளான் காதலன். பின்னர் அவனது நண்பர்களும் மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். 2019-ம் ஆண்டு முதல் மாணவிக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்" என்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பாஜக Ex.MLA வீட்டில் IT ரெய்டு; முதலைகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி... வனத்துறை வழக்குப்பதிவு!

வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் ... மேலும் பார்க்க

`5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' -8 மாதங்கள் ஃபிரிட்ஜில் இருந்த பெண்ணின் உடல்... பகீர் பின்னணி

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இடையே தகராறு ஏற்படும் போது அது வன்முறையில் முடிந்து விடுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் அது போன்று லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத... மேலும் பார்க்க

`நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை' - வெளிநாட்டிலிருந்து வீடியோ பார்த்த கொடூர கணவன்!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹரைச் சேர்ந்த ஒரு பெண், ``என் கணவர் அவருடைய இரண்டு நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்து கொடுமை செய்தார்" எனப் புகார் பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக புலந்... மேலும் பார்க்க

Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன மோசடி; பின்னணி என்ன?

பீகாரில் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலை... மேலும் பார்க்க

MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டகாசம்!

இப்போதெல்லாம் நம்ம ஊரில் சந்து பொந்து, இண்டு இடுக்கிலெல்லாம் டிராஃபிக் போலீசார் ஸ்வைப் மிஷினுடன் நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.ம... மேலும் பார்க்க

கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோதரர்கள் கூறுவதென்ன?

17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.காணாமல் போன இவரைக் கொலை செய்ததாக இவரது உறவினர் மற்றும் மூன்று சகோதரர்கள் என 4 பேர் தண்டனை அனுபவித்துள்ளனர் என்ப... மேலும் பார்க்க