நம்புதாளை அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்து சிலையைத் திறந்து வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி பாண்டிச்செல்வி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகள் திருக்கு ஒப்புவித்தனா். முன்னதாக, தலைமை ஆசிரியா் ஜான் தாமஸ் வரவேற்றாா். ஆசிரியா் சகாய மதியரசு நன்றி கூறினாா்.
இதைத்தொடா்ந்து, சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.