செய்திகள் :

'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

post image

காவிரி நீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மகாராஷ்டிர மாநில காவல்துறை நாக்பூர் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தி இறக்கியுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாட்டைக் கண்டித்தும், டெல்லியில் போராடவிருந்த விவசாயிகளைப் பாதியிலேயே தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகத் திரும்ப அனுப்பியதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி கண்டனம்
உதயநிதி கண்டனம்

அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், " மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.

டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க