செய்திகள் :

நவம்பர் 24-ம் தேதி வானில் தோன்றும் பிரமாண்ட சூப்பர்மூன் - வானை அலங்கரிக்க வரும் அரிய நிகழ்வு!

post image

"வெண்ணிலவே... வெள்ளி வெள்ளி நிலவே..." என்று பாடல்கள் கொண்டாடும் நிலவை ரசிக்காதவர்கள் யார்? தேய்ந்தும் வளர்ந்தும், சில நேரங்களில் வெண்மையாகவும், சில நேரங்களில் பொன்னிறமாகவும் வானில் வலம் வரும் நிலவு, தினமும் நம் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டே இருக்கிறது.

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, அந்த நிலவின் அழகு நம்மை சில நிமிடங்கள் அப்படியே ரசிக்க வைக்கும். ஆனால், நவம்பர் 24-ம் தேதி அந்த நிலவு வழக்கத்தைவிட இன்னும் கொஞ்சம் பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கப் போகிறது. காரணம்... அன்று தோன்றப்போகும் 'சூப்பர்மூன்'!

நிலவு தனது 27 நாள் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் நிலையில் முழு நிலவாகத் தோன்றும்போது, அது 'சூப்பர்மூன்' என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நிலவு வழக்கத்தைவிட பிரமாண்டமாகத் தெரியும்.

Ai created image

பொதுவாகத் தோன்றும் முழு நிலவைவிட இந்த சூப்பர்மூன் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவம்பர் 24-ம் தேதி இரவு 8:23 மணிக்கு இந்த முழு நிலவு உச்சநிலையை அடையும்.

இந்த நவம்பர் முழு நிலவுக்கு 'பீவர் மூன்' (Beaver Moon) என்ற பெயரும் உண்டு. குளிர்காலத்துக்கு முன்பு நீர்நாய்கள் (Beavers) சுறுசுறுப்பாக செயல்படும் காலத்தில் இந்த முழு நிலவு தோன்றுவதால், இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், நவம்பர் 24-ம் தேதி இரவு வானத்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள்... வழக்கமான நிலவு அல்ல, பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட நிலவு உங்களுக்காகக் காத்திருக்கிறது

சுப்ரீம் கோர்ட் நீதிபதி என நினைத்து ஒவைசிக்கு மரியாதை செலுத்திய உத்தரபிரதேச போலீஸார்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இதற்... மேலும் பார்க்க

7 நாள் கெடு: காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்த மெட்டா அலுவலகத்தில் தாக்குதல்!

இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் உதய் பானு சிப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் மணீஷ் சர்மா ஆகியோரின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசேஜ்சர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை கையாள கட்டுப்பாடுகள் வ... மேலும் பார்க்க

மும்பை பூங்காவுக்கு வந்த தம்பதியை கம்பால் விரட்டி விரட்டி அடித்த சிறார்கள் - பரவும் அதிர்ச்சி வீடியோ

மும்பை குர்லா பகுதியில் உள்ள போனிக்ஸ் மால் வணிக வளாகம் அருகில் பூங்கா ஒன்று இருக்கிறது. அந்த பூங்காவிற்கு காதல் ஜோடி ஒன்று வந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அவர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்துக்க... மேலும் பார்க்க

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு; ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்தில் பா.ஜ.க முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக காங்... மேலும் பார்க்க

ஈரோடு பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசை வழங்கிய இந்து சமுதாயத்தினர்

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசை கொண்டு வந்த பொதுமக்கள்பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசை கொண்டு வந்த பொதுமக்கள்பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசை கொண்டு வந்த பொதுமக்கள்பள்ளிவாசல் திற... மேலும் பார்க்க

மும்பையில் 40 ஆண்டு தனிமை வாழ்க்கை; இறந்த சென்னை மூதாட்டி உறவினர்களை ஆன்லைனில் தேடும் நெட்டிசன்கள்!

எத்தனையோ உறவினர்கள் இருந்தாலும், சிலர் வயதான காலத்தில் தனிமையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் இறந்தாலும்கூட ரத்த சொந்தங்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்... மேலும் பார்க்க