செய்திகள் :

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: 'இந்தியாக் கூட்டணி பேசப் போகும் பிரச்னைகள் என்னென்ன?' - கார்கே லிஸ்ட்

post image

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் பிளான் செய்துள்ளன. அந்தப் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் கட்சியும் இந்தியாக் கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளும் பொதுமக்களின் குரலாக ஒலித்து, ஒவ்வொரு விவகாரத்திலும் மோடி அரசிடம் இருந்து பதில்களைக் கோரும்.

ராமர் கோயில்
ராமர் கோயில்

ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தங்களது உழைப்பில் வந்த பணத்தைப் பக்தி சிரத்தையுடன் காணிக்கையாக வழங்கினர்.

இந்நிலையில், கோவில் காணிக்கைகளில் நடந்துள்ள திருட்டு மற்றும் நம்பிக்கைத் துரோகம் தொடர்பான விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

எனவே, இது குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, முழு கணக்கு விபரங்களும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

அதேபோல், வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வி முறையின் வீழ்ச்சி தொடர்பான விவகாரத்தில்—2014 முதல் இப்போது வரை 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன, இதனால் 25 குழந்தைகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

அதைப்போலவே, 3.5 கோடி வாகன உரிமையாளர்கள் மீது எத்தனால் கலப்பை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விவகாரம்—இதை அரசாங்கம் ஒரு 'பரிசோதனை' என்று அழைக்கிறது. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டும்தான் பா.ஜ.க-வின் ஒரே ஆயுதமா?

பெட்ரோல்
பெட்ரோல்

இந்த விவகாரங்கள் தவிர, பிற முக்கியப் பிரச்னைகள் மற்றும் வரவிருக்கும் மசோதாக்கள் நாட்டின் மக்களைப் பாதிக்கும் கேள்விகளாக உருவெடுத்துள்ளன.

'இந்தியாக் கூட்டணி' எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் அரசிடமிருந்து பொறுப்புக்கூறலை வலியுறுத்திக் கேட்கும்.

மக்களின் உரிமைகள், மக்களின் குரல் மற்றும் மக்களின் நம்பிக்கைகளுக்கான இந்தப் போராட்டம் முழு பலத்துடன் களத்தில் முன்கொண்டு செல்லப்படும்"

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க