செய்திகள் :

"நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்; எப்போது மற்றும் யாருடன்.!"- ராகவா லாரன்ஸ் அதிரடி

post image

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ``நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இன்று காலை 10 மணிக்கு வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் அரசியலுக்கு வருவது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் லாரன்ஸ், "

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

அந்த பதிவில், ``எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை உண்மையோடு செய்யுங்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் "வேண்டாம்" என்று கூறினால், நான் அரசியலில் ஈடுபடாமல் சமூகத்திற்கு எனது சுயநலமற்ற சேவையைத் தொடர்வேன்.

ஆனால் நீங்கள் "ஆம்" என்று கூறினால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன், இந்த பயணத்தை நான் எப்போது மற்றும் யாருடன் தொடங்க உத்தேசித்துள்ளேன் என்பதை வெளிப்படுத்துவேன்" என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி ... மேலும் பார்க்க

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொ... மேலும் பார்க்க

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' - சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு ... மேலும் பார்க்க

92 உலகக் கலைஞர்களுடன் சிம்போனி சாதனை! - லிடியன் நாதஸ்வரத்துக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

இளமைப் பருவத்திலேயே உலக அரங்கில் முத்திரை பதித்து வரும் இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம், லண்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவின் (London Symphony Orchestra) 92 உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது... மேலும் பார்க்க

சர்ச்சை வீடியோ: ``அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை அல்ல; AI தொழில்நுட்பத்தால்..." - அமைச்சர் ராஜ் மோகன்

கோவையில் தமிழக அரசின் சார்பில் பிரமாண்ட அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்காட்சியின் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை... மேலும் பார்க்க