செய்திகள் :

"நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!"- மாரி செல்வராஜ்

post image

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

விஜய்
விஜய்

அதற்கு பதிலளித்த அவர், " சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம்.

ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம்.

யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் - மாரி செல்வராஜ்
தனுஷ் - மாரி செல்வராஜ்

தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்," அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

வீசும் வெளிச்சத்திலே: "40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி !" - மதன் கார்க்கி | வரித்துணையே 5

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்க... மேலும் பார்க்க

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார்.படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளை... மேலும் பார்க்க

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) ப... மேலும் பார்க்க

AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க