செய்திகள் :

"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

post image

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தன்னிடம் புல்லட் புரூஃப் கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கிரிட்கெட்டில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

தனது சொந்த நாட்டு அணிக்காக மட்டுமல்லாது பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.

குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 136 போட்டிகளில் ஆடி, 158 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், " என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது.

அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன்.

ரஷீத் கான் - கெவின் பீட்டர்சன்
ரஷீத் கான் - கெவின் பீட்டர்சன்

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான்" என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் திறந்த ரோஹித்

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் தொடக்க நாளில் அமெரிக... மேலும் பார்க்க

BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! - Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video

பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்ற... மேலும் பார்க்க

IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" - வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோத... மேலும் பார்க்க

IPL: கிளம்பிய எதிர்ப்புகள்; அறிவுறுத்திய பிசிசிஐ - வங்கதேச வீரரை விடுவித்த கொல்கத்தா அணி!

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவ... மேலும் பார்க்க

IPL: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்; வங்கதேச வீரரை KKR-லிருந்து விடுவிக்க அறிவுறுத்திய பிசிசிஐ

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது.அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள... மேலும் பார்க்க

Khawaja: ``இவை என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்கொண்ட அதே இனவெறிதான்" - ஓய்வுபெறும் ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வ... மேலும் பார்க்க