செய்திகள் :

"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ராமன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (ஏப்ரல்.2) வெளியிட்டிருக்கிறது.

ராமாயணம்
ராமாயணம்

இந்நிலையில் 'ராமாயணா' படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரன்பீர் கபூர், "சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த கதாபாத்திரத்திற்காக (ராமர்) தன்னை அணுகியபோது, உடனடியாக நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன்.

நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல. என்னால் அந்தப் பாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்க முடியாது என்று அவரிடம் கூறினேன். ஆனால், அந்த பயம் விரைவில் நன்றியுணர்வாக மாறியது.

ஏனென்றால், இது போன்ற வாய்ப்புகள் என் வாழ்க்கையில் எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டன.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

இந்தக் கதாபாத்திரத்தின் மீதும், ராமாயணக் கதையின் மீதும் எனக்கு அளவற்ற அன்பும், மரியாதையும் உண்டு. ராமர் கதாபாத்திரத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க

Bhoot Bangla - அக்‌ஷய்குமாரின் கிழிந்த ஆடை; டிரெய்லர் விழா ட்ரெண்ட் ஆனது எப்படி?

மும்பையில் நடைபெற்ற `Bhoot Bangla' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான அக்‌ஷய்குமார், தபு, வாமிகா கபி, ராஜ்பால் யாதவ் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க