செய்திகள் :

நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள்

post image

கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி.

ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய மிஸ் செய்திருந்தாலோ, அதை இப்போது செய்யலாம். ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதில் தவறு ஏதேனும் இருந்தால், இப்போது திருத்திக் கொள்ளலாம்.

நாளையும் தவறவிட்டுவிட்டால், இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கலை இனி செய்யவே முடியாது.

வருமான வரி ரீ-ஃபண்ட்
வருமான வரி ரீ-ஃபண்ட்

நாளைக்குப் பிறகு...

வரும் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு, அப்டேட்டட் வருமான வரி கணக்குத் தாக்கலைத் தான் செய்ய முடியும்.

தாக்கல் செய்ய தாமதத்திற்கு ஏற்றவாறு மொத்த வரிக்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும்.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு அபராதம் இல்லை. ஆனால், தாமதமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

ரீஃபண்ட் வரவில்லையா?

இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம்.

அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது.

நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும... மேலும் பார்க்க

முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன?

தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். "1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,3... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க!

கடந்த ஆண்டு சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டு உலோகங்களுமே எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டன.இந்த ஆண்டு அந்த இரண்டு உலோகங்களுடன் இன்னும் இரண்டு உலோகங்களுக்கு மவுசு உள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ... மேலும் பார்க்க

2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா?

2025-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலையின் வளர்ச்சி வழக்கத்தை விட மிக மிக அதிகமாக இருந்தது. சென்னையில் தங்கம் விலை 2025-ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ.47,000-க்கு உயர்ந்திருந்தது. வெள்ளி விலை ரூ.183-க்கு உயர்ந்தி... மேலும் பார்க்க

மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!

2026 - இனிதே தொடங்கியாச்சு மக்களே. ஃபாலோ செய்கிறோமோ... இல்லையோ... ஆனால், ஒவ்வொரு புத்தாண்டிற்கும் ரிசல்யூஷன் எடுப்பது தற்போது சம்பிரதாயம் ஆகிவிட்டது. இந்த ஆண்டும் ஏதாவது ரிசல்யூஷன் எடுத்திருப்பீர்கள்.... மேலும் பார்க்க

2026 பிறக்கப் போகுது... இன்னும் எத்தனை வருஷம் இதே பயத்தோட ஓடப் போறீங்க?

2025 முடியப் போகுது. ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க. "நான் சம்பாதிக்கிறேன், உழைக்கிறேன். ஆனா, விலைவாசி ஏறுகிற வேகத்துக்கு என் சேமிப்பு ஏறமாட்டேங்குதே! என் பிள்ளைகளோட எதிர்காலம் என்னாகும்?" – இந்தக் கே... மேலும் பார்க்க