செய்திகள் :

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்' பின்னணி

post image

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். 

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம்.

இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி.

இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார்.

ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா

அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. 

தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். 

தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள்.

முடிவு விரைவில் தெரியும்.!

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நுழைவு... மேலும் பார்க்க

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்ட... மேலும் பார்க்க

'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழ... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட... மேலும் பார்க்க

'இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...' - தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்

தவெகவின் 'ஒரே' கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்த... மேலும் பார்க்க