செய்திகள் :

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், நகரச் செயலா் ஏ.அரபு முகமது ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் எம்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினா் சிவமணி உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: ஆட்சியா்

கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். கொடைக்கானலில் உள்ள சுற்று... மேலும் பார்க்க

யுபிஏ செயலி மூலமாகவும் மாநகராட்சிக்கு வரி செலுத்தலாம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை இணைய வழி செயலிகள் மூலமாகவும் செலுத்தும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் குறிப்பாக பெரும்பாலான மாநகராட... மேலும் பார்க்க

பழனி பகுதிகளில் ரூ.300 கோடியில் புதிய மேம்பாலங்கள்! -அமைச்சா் அர. சக்கரபாணி

பழனியை சுற்றிலும் பிரதானச் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடும் ரயில்வே கடவுப்பாதைகளில் ரூ.300 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள்ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம்தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. ச... மேலும் பார்க்க

நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!

நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் சனிக்கிழமை... மேலும் பார்க்க