பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் ...
'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?
நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பான அந்த பதிவில், 'கைலாசா நாட்டின் ஆன்மீக பிரதிநிதிகள் தமிழக அரசின் அமைச்சர்களை சந்தித்து முறைப்படி ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் போது சுவாமி நித்யானந்தா எழுதிய கைலாசாவின் வரலாற்று புத்தகத்தை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்தோம்.
இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும் அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோருக்கு இந்த புத்தகத்தை வழங்கினோம்' எனக் கூறியிருக்கிறார்.


இதுதொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம், 'நித்யானந்தா சொல்வதைப் போல எந்த அரசாங்கரீதியான சந்திப்புகளும் நடக்கவில்லை. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனும் சூழலே உள்ளது. அப்படி மனு கொடுக்க அமைச்சர்களை சந்திப்பதை போல வந்துதான் புத்தகத்தை கொடுத்து படம் எடுத்திருக்கின்றனர். வெளியில் அதை எதோ ராஜாங்கரீதியான ஆலோசனை என்பதை போல சித்தரிக்கின்றனர். இவர்களுக்கு இதே வேலையாக போய்விட்டது. கட்சி பேதமின்றி எல்லா கட்சியின் கூட்டங்களும் புத்தகத்தோடு போய் நிற்கிறார்கள். எதாவது முக்கியஸ்தர்களை சந்திக்க முடிந்தால் அவர்களுடன் படமெடுத்து அதை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்' என்றனர்.














