செய்திகள் :

"நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!"- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

post image

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " முழு மனதுடன் நான் காதலிக்கும் இந்த விளையாட்டை விளையாடுவதும், அதே விளையாட்டின் மூலம் என் நாட்டுக்குச் சேவை செய்வதும் பெருமையாக இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இதுவரை நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி.

என்னை நம்பி வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி.

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இந்த 10 ஆண்டுகள் வெறும் தொடக்கமே...இப்போது தான் என்னுடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது.

சிறுவயதில் பரோடாவிலிருந்து விளையாட கூடுதல் தூரம் ஓடிய இளம் ஹர்திக்கை நான் நினைத்து பார்க்கிறேன்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

பேட்டிங் பயிற்சி செய்யாதப் பவுலர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் 19 வயதில் ஒரு ஆல்ரவுண்டரானார்.

கவனிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து, என் தேசத்திற்காக விளையாடுவதுதான் எனக்கு மிகவும் மதிப்புமிக்க பயணம்" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க... மேலும் பார்க்க

Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ... மேலும் பார்க்க

'தேசியளவில் சாதித்தவருக்கே இந்நிலை என்றால்' - ரயிலில் தடகள வீரர்களுக்கு நேர்ந்த அவலம்; பின்னணி என்ன?

கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும்.அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் த... மேலும் பார்க்க

``பேட்மிண்டன் நடத்துவதற்கு டெல்லி தகுந்த இடமல்ல" - போட்டியிலிருந்து விலகிய ஆண்டன்சென்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் ... மேலும் பார்க்க

IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" - கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோ... மேலும் பார்க்க

BCB:``பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது!" - ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க