செய்திகள் :

''நிறைய பேர் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்பாங்க; சிவப்பதிகாரம் ஷூட்டிங்ல ஒரு பெண்.."- விஷால் ஷேரிங்ஸ்

post image

நடிகர் விஷால் தற்போது 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு முதலில் இப்படத்தை இயக்கி வந்த நிலையில் இப்போது விஷால்தான் படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளிவந்த பேட்டியில் அவருடைய கரியரின் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Vishal - Magudam
Vishal - Magudam

தற்போது அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. அதிலும் சில சுவாரஸ்யமான தகவல்களை விஷால் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன்.

அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் அதிகமாகப் பேசிட்டு இருப்பான்” என்றவர், “ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் வந்து 'உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு' சொல்வாங்க. 'எதை வச்சு அதை முடிவு பண்ணினீங்க. திரையில பார்க்கிற விஷால் வேற'னு சொல்லிடுவேன். ஒரு பெண் என்னுடைய முகத்தை இரத்தத்துல வரைந்து எடுத்திட்டு வந்திருக்காங்க.

‘சிவபாதிகாரம்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண் திடீரென எனக்கு முத்தம் கொடுத்திட்டாங்க. நான் உடனே அவரிடம் ‘இப்படிச் செய்யாதீங்க’னு சொல்லிட்டேன்.

Vishal
Vishal

என்னுடைய புகழை யூஸ் பண்ணி எந்தப் பெண்ணையும் நான் தவறாகப் பயன்படுத்தினது கிடையாது. என்னைப் பற்றின வதந்திகளுக்கு நானே முற்றுப்புள்ளி வச்சிடுவேன். ‘மார்க் ஆண்டனி’ படத்துடைய கிளைமாக்ஸ்ல என்னை விமர்சித்த மாதிரி நான் விமர்சிப்பேன்.

அதுபோல எப்பவும் என்னையே நான் விமர்சிப்பேன். ஒரு முறை நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை வேண்டிக்கிட்ட விஷயத்திற்காக என்னை ட்ரோல் பண்ணினாங்க. அதனால அதையும் இப்போ நிறுத்திட்டேன்” எனக் கூறினார்.

Dhanush: "எனக்கு லவ் ஃபெயிலர் முகம் இருக்கிறதா!" - நிகழ்வில் தனுஷின் ஜாலி டாக்!

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை 'ராஞ்சனா', 'அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ... மேலும் பார்க்க

AR Rahman: "எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது பிரச்சனை!" - ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq M... மேலும் பார்க்க

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென... மேலும் பார்க்க

Friends: " 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்..." - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!

நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட... மேலும் பார்க்க

"அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன்" -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில்ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் ந... மேலும் பார்க்க

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் த... மேலும் பார்க்க