TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album
`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!
இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய்.
இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், "நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம்.

எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான்
எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும்.
ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம்.
ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும்.
பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும்.
தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும்.
நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும்.

இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம்.
நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு.
இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும்" என்று பேசியிருக்கிறார்.
















