செய்திகள் :

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

post image

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித்.

அஜித் குமார்
அஜித் குமார்

அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது.

தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது.

இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன்.

இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

AR Rahman: "எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது பிரச்சனை!" - ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார். Tere Ishq M... மேலும் பார்க்க

Friends: " 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்..." - சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!

நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து 'ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும். படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். 'ஃப்ரெண்ட... மேலும் பார்க்க

"அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன்" -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில்ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் ந... மேலும் பார்க்க

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் த... மேலும் பார்க்க

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடி... மேலும் பார்க்க

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர்... மேலும் பார்க்க