செய்திகள் :

"அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன்" -ஹரிஷ் கல்யாண்

post image

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’.

இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், "என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம்.

இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன்.

யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன்.

நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும்" என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் த... மேலும் பார்க்க

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடி... மேலும் பார்க்க

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர்... மேலும் பார்க்க

`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ - 100வது அகவையில் 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக் கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்க... மேலும் பார்க்க